தமிழகம்

திருவண்ணாமலை தீபம்: 2,700 சிறப்பு பேருந்து இயக்க திட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: திருவண்ணாமலை தீபத் திருவிழாயையொட்டி, பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக 2,700 சிறப்புப் பேருந்துகள் இயக்கதிட்டமிட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவை காண, தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் செல்வது வழக்கம். இந்த ஆண்டு தீபத் திருவிழா தொடங்கியுள்ளது. 17 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் டிச.3-ம் தேதியும், மகா தீபத் திருவிழா டிச.6-ம் தேதியும் நடைபெறுகிறது.

டிச.6-ம் தேதி மகா தீபத்தன்று சுமார் 25 லட்சம் பக்தர்களும், தேரோட்டத்தின்போது 5 லட்சம் பக்தர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். எனவே, டிச. 6, 7 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து செல்லும் வகையில் 2,700 சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், தேரோட்டத்தின்போதும், திருவிழாக்களின் பிற நாள்களிலும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, போதிய பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன. இது தொடர்பான விரிவான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இவ்வாறு போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT