புதுச்சேரி: மத்திய அமைச்சரின் அழைப்பை ஏற்று "காசி தமிழ்ச் சங்கமம்" நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று வாரணாசிக்கு புறப்படுகிறார் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை.
மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில் காசியில் நடைபெறும் "காசி தமிழ்ச் சங்கமம்" நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு அழைப்பு விடுத்துள்ளார். மத்திய அமைச்சரின் அழைப்பினை ஏற்று "காசி தமிழ் சங்கமம்" நிகழ்ச்சியில் கலந்துகொள்ள துணைநிலை ஆளுநர் இன்று(24/11/2022) வாரணாசி புறப்படுவதாக ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நாளை(25/11/2022) முழுவதும் வாரணாசியில் தங்கி இருந்து அங்கு நடைபெறும் "காசி தமிழ்ச் சங்கமம்" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த தமிழறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு ஆளுநர் தமிழிசை தலைமை தாங்க உள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.