தமிழகம்

ஜெ.வுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சவப்பெட்டி

செய்திப்பிரிவு

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ், நடிகை மனோரமா உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் இறந்த போது, அவர்களின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியை தயாரித்துக் கொடுத்தது ‘பிளை யிங் ஸ்குவார்டு அண்டு ஹோமேஜ் கம்பனி’ என்ற நிறுவனம்தான். தற்போது ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டிருந்த சவப் பெட்டியை தயாரித்துக் கொடுத் ததும் அதே நிறுவனம்தான்.

ராஜாஜி அரங்கத்தில் பொது மக்கள் எளிதாக பார்க்கும் வகையில் சாய்ந்த நிலையில் ஜெயலலிதாவின் உடல் வைக் கப்பட்டிருந்தது. அதற்காக உயரம் குறைந்த அதிநவீன இயந்திரங்களுடன் கூடிய, வெளியில் தங்கமுலாம் பூசப்பட்ட பெட்டியை அந்த நிறுவனம் அளித்துள்ளது.

இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் பி.ஆர்.எம்.எம்.சாந்தகுமார் கூறும் போது, ‘‘பொதுமக்கள் பார்க்க எளிதாக, சாய்வு நிலையில் சவப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது. சாய்வு நிலையில் இருக்கும் போது உடல் வெளியில் இறங்கி விடாமல் இருக்க சில பிரத்யேக அமைப்புகள் அதில் செய்யப் பட்டிருந்தன. இந்தப் பெட்டியில் 2, 3 நாட்கள் வரை 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உடலை பதப்படுத்தி வைத்திருக்க முடியும்’’ என தெரிவித்துள்ளார்.

சாந்தகுமார் தனது பணியாளர் களுடன் பெட்டியை போயஸ் தோட்டத்துக்கு எடுத்து வந்து, ஜெயலலிதா உடலை அதில் வைத்து ராஜாஜி அரங்கத்துக்கு கொண்டுவந்துள்ளனர். எம்ஜிஆர் நினைவிடத்தில் அவரது உடலை சவப்பெட்டியில் இருந்து எடுத்து சந்தனப்பேழையில் வைத்துக் கொடுத்துள்ளனர்.

முதல்வருக்கான சவப் பெட்டியை அளித்த சாந்தகுமார், கடந்த 1994-ம் ஆண்டு இந்த தொழிலை தொடங்கியுள்ளார். முதன்முதலில், முன்னாள அமைச் சர் நெடுஞ்செழியன் உடலை வைப்பதற்கான பெட்டியைத் தயாரித்து அளித்துள்ளார். அதைத்தொடர்ந்து, தென் மாநிலங் களில் இதுவரை 500-க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர் களுக்காக சவப்பெட்டி தயாரித்து வழங்கியுள்ளதாக சாந்தகுமார் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT