அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே. கட்சியை இனி வழிநடத்திச் செல்பவருக்கு வேறு பதவியை உருவாக்க வேண்டும். சசிகலா உள்ளிட்ட யாரும் அந்த புதிய பதவிக்கு வந்தால் அதனை நாங்கள் ஏற்போம் என்று புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓம்சக்தி சேகர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி அதிமுக சார்பில் லெனின் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் புருஷோத்தமன் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
கூட்டத்துக்கு தலைமை தாங்கி முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்திசேகர் பேசியதாவது:
தற்போது தமிழகத்தில் இருக்கும் முதல்வர் (ஓபிஎஸ்) முதல் கடைக் கோடி தொண்டன் வரை அனை வரும் ஜெயலலிதாவை 'நிரந்தர பொதுச் செயலாளர்' என்றே அழைத்து வந்தோம். இந்த பதவியை வேறு எவருக்கும் தரக் கூடாது. பொதுச் செயலாளர் பதவி என்பது ஜெயலலிதாவுக்கு மட்டுமே நிரந்தரமாக இருக்க வேண்டும். கட்சியில் தலைவர், பொறுப்பாளராக வேறு எவரையும் நியமித்துக்கொள்ளலாம்.
ஒவ்வொரு தொண்டனும் ஜெய லலிதாவுக்கு தந்த அங்கீகாரம், 'நிரந்தர பொதுச் செயலாளர்' என்ற பதவியாகும். இதை தமி ழகத் தலைமைக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். அனைத்து தொண் டர்களும் இதையே விரும்புகின்ற னர் என்றார்.
புதுச்சேரி நகரின் மையப் பகுதி யில் அரசு சார்பில் ஜெயலலிதா வுக்கு முழு உருவச் சிலை அமைக்க வேண்டும், புதிய மணிமண்டபம் கட்ட வேண்டும். இல்லையென்றால் ஓம்சக்தி சேகரின் சொந்த நிலத்தில் 10 ஆயிரம் சதுர அடி பரப்பில் மணிமண்டபம் கட்டி ஜெயலலிதா முழு உருவச் சிலை நிறுவப்படும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.
நிகழ்ச்சிக்கு பிறகு புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஓம்சக்திசேகர் கூறிய தாவது: தற்போது கட்சியை வழிநடத்துபவருக்கு புதிதாக ஒரு பதவியை உருவாக்க வேண்டும். சசிகலா உள்ளிட்ட யார் அந்த பதவிக்கு வந்தாலும் அதனை நாங்கள் ஏற்போம் என்றார்.
சசிகலா வந்தால் ஏற்போம்
புதுச்சேரி சட்டப்பேரவை அதிமுக தலைவர் அன்பழகன் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது: அதிமுகவை விமர்சிக்க சுப்பிரமணிய சுவாமிக்கு தகுதி இல்லை. அவர் மீது பிரதமர் மோடி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிமுகவில் பிளவு ஏற்படும் என சுப்பிரமணிய சுவாமி கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. அதிமுகவை எக்காலத்திலும் எவராலும் வீழ்த்த முடியாது.
பொதுச் செயலாளர் ஜெயலலி தாவுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து பணியாற்றி வரும் சசிகலாவுக்கு எதுவும் தெரி யாது என சுப்பிரமணிய சுவாமி கூறுவது கண்டிக்கத்தக்கது. கட்சி யின் பொதுச் செயலாளராக சசிகலா வந்தால் ஏற்றுக்கொள்வோம். இதற்கான அனைத்துத் தகுதியும் அவருக்கு உள்ளது” என்றார்.