மதுரை: மதுரை மாநகராட்சி 42-வது வார்டு பகலவன் பூக்காரத் தெருவில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டியுள்ள தம்பதியிடம் பாதாள சாக்கடை இணைப்புக்காக திமுக கவுன்சிலரின் கணவர் பணம் கேட்டு மிரட்டியதாக சமூக வலைதளங்களில் குரல் பதிவு வெளியானது.
இதையடுத்து திமுக கவுன்சிலரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை முனிச்சாலை பகுதியில் மதுரை மாநகர் பாஜக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரன் தலைமை வகித்தார். மாவட்டப் பார்வையாளர் கார்த் திக்பிரபு முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ஜெயவேல், அண்ணாநகர் பகுதிச் செயலாளர் சீதா பார்த்தசாரதி மற்றும் நிர் வாகிகள் பங்கேற்றனர்.