சென்னை கோடம்பாக்கம் தீபர்சன் அடுக்குமாடி குடியிருப் பில் வசிப்பவர் ரஞ்சித்குமார்(31). இவர் தன்னுடைய ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை விற்பதற்காக இணையதளத்தில் விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரத்தை பார்த்து ஒருவர் ரஞ்சித்குமாரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு, செல்போனை வாங்கு வதாகவும், மாதவரம் ரவுண்டனா அருகில் வருமாறும் கூறியுள்ளார். ரஞ்சித்குமார் தனது செல்போனுடன் இரவு 8 மணியளவில் அங்கே சென்றுள்ளார்.
ஸ்கூட்டரில் அங்கு வந்த 2 இளைஞர்கள், ரஞ்சித் குமாரிடம் இருந்து செல்போனை வாங்கி சோதிப்பது போல நடித்து, செல்போனுடன் ஸ்கூட்டரில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர். இது குறித்து ரஞ்சித்குமார் மாதவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மோசடி நபர் பேசிய செல்போன் எண், அவர்கள் தப்பிச்சென்ற மோட்டார் சைக்கிள் எண் ஆகியவற்றை வைத்து, தண்டையார் பேட்டை வைத்தியநாதன் தெருவைச் சேர்ந்த பிரெட்ரிக்(20), எண்ணூர் நெட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மோத்தீஸ் வரன்(21) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
ரஞ்சித்குமாரிடம் இருந்து பறித்துச் சென்ற செல்போன், திருட்டுக்கு பயன்படுத்திய ஸ்கூட்டர் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் இருவரும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருவது தெரிந்தது.