சென்னை: கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேரின் நீதிமன்ற காவல் அடுத்த மாதம் 6-ம் தேதி வரை நீட்டித்து என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை சங்கமேஸ்வரர் கோயில் அருகே கடந்த மாதம்23-ம் தேதி கார் வெடித்ததில் காரைஓட்டி வந்த ஜமேஷா முபின் (25)உயிரிழந்தார். இது தொடர்பாக சென்னையில் உள்ள என்ஐஏ அதிகாரிகள் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26),அப்சர்கான் (26) ஆகிய 6 பேர்அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 6 பேரும்பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் தேசிய புலனாய்வு சிறப்புநீதிமன்றத்தில் கடந்த 8-ம் தேதிஆஜர்படுத்தப்பட்டனர். 6 பேரையும் நவம்பர் 22-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கநீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.
இதையடுத்து 6 பேரும் மீண்டும்கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கு சம்பந்தமாக 6 பேரையும் சென்னை என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால் பாதுகாப்பு கருதியும், 6 பேரையும் அழைத்து வருவதில் நேரம் அதிகம் ஏற்படுவதாலும் கோவை சிறையில் இருந்தவாறு வீடியோ கான்பரன்ஸ் மூலம் என்ஐஏ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 6 பேருக்கும் டிசம்பர் 6-ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.