தமிழகம்

தலைமைச்செயலர் வீட்டில் சோதனை மத்திய அரசின் மிரட்டல்: ஆம் ஆத்மி தொண்டரால் பரபரப்பு

செய்திப்பிரிவு

தமிழக தலைமைச் செயலாளர் பி. ராமமோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) காலை 6 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை அண்ணா நகரில் உள்ள ராமமோகன் ராவ் வீட்டில் சோதனை நடைபெறுகிறது. இதுதவிர அவருக்கு தொடர்புடைய மேலும் 10 இடங்களிலும் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

அண்ணா நகரில் உள்ள தமிழக தலைமைச் செயலாளர் பி. ராமமோகன ராவ் வீட்டின் முன்பு திரண்ட செய்தியாளர்கள் | படம்: ம.பிரபு

இந்நிலையில் அவரின் வீட்டருகே ஆம் ஆத்மி தொப்பியை அணிந்த நபர் ஒருவர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவரை விசாரித்தபோது அண்ணா நகரைச் சேர்ந்த செந்தில் குமார் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் கூறும்போது, "தமிழக அரசை மிரட்டுவதற்காக மத்திய அரசு ரெய்டு என்ற பெயரில் தமிழக அரசின் தலைமை அதிகாரிகளின் வீடுகளை சோதனையிடுகிறது" என்றார்.

தொடர்ந்து செந்தில்குமார் கூச்சலிட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

படங்கள்: ம. பிரபு

SCROLL FOR NEXT