புயல் நிவாரணப் பணிகளை முதல் வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் பார் வையிட்டார்.
வங்கக்கடலில் உருவான வார்தா புயல் நேற்று முன்தினம் சென் னையை தாக்கி, மிகுந்த சேதத்தை ஏற்படுத்தியது. தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை களால் உயிர்ச்சேதம் குறைந்தா லும், மரங்கள் முறிந்து விழுந்த தால், மின் இணைப்புகள் துண்டிக் கப்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தமிழக அரசு முழு வீச்சில் இறங்கியுள்ளது.
தமிழகத்தை புயல் தாக்கும் என்ற அறிவிப்பு வந்தபோதே சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, பணிகள் ஒருங்கி ணைக்கப்பட்டன. தொடர்ந்து முதல் வர் ஓ.பன்னீர்செல்வம், அவ்வப் போது தலைமைச் செயலர், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தி, பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளைத் துரிதப் படுத்தினார்.
மக்களைச் சந்தித்தார்
நேற்று முன்தினம் புயல் தாக்கிய நிலையில், காலை, பிற்பகல், மாலை, இரவு என தொடர்ந்து புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள், மீட்பு நடவடிக்கைள் குறித்து ஆய்வு செய்தார். அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி வந்தார். இரவு திரு வொற்றியூர் பகுதிக்குச் சென்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அங்கு நிவாரண முகாம்களில் தங்கியிருந்த மக்களைச் சந்தித்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று காலை, புயல் பாதிப்புகள் தொடர் பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஆய்வு செய்தார். அக்கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிசாமி, ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலர் பி.ராமமோகன ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பால கிருஷ்ணன், டிஜிபி ராஜேந்திரன், செயலர்கள் சண்முகம் (நிதி), ராஜீவ் ரஞ்சன்(நெடுஞ்சாலைகள்), சபீதா(பள்ளிக்கல்வி), சந்திர மோகன்(வருவாய்), ககன்தீப்சிங் பேடி(வேளாண்மை), ஜெ.ராதா கிருஷ்ணன்(சுகாதாரம்), சந்திர காந்த் பி.காம்ப்ளே (போக்குவரத்து) வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், மின் வாரிய தலைவர் சாய்குமார், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர், தொடர் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதையடுத்து சென்னை மாநக ராட்சி அலுவலகத்துக்கு சென்ற முதல்வர், அங்கு, பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வுக் கூட்டத்தில் பி.தங்கமணி, ஜெயக்குமார், உடுமலை கே.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அமைச்சர்கள், மாநக ராட்சி அதிகாரிகள் என பலர் பங் கேற்றனர். இதில், புயலால் பாதிக் கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளை விரைவு படுத்துவது குறித்து விவாதித்து, அறிவுரைகள் வழங்கினார்.
நிவாரணப் பொருட்கள்
பின்னர் மணலியில் உள்ள நிவா ரண முகாமுக்கு சென்ற முதல் வர் ஓ.பன்னீர்செல்வம், அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த பொது மக்களுக்கு நிவாரணப் பொருட் களை வழங்கினார். தொடர்ந்து அங்கிருந்து பழவேற்காடு சென்ற அவர் புயல் பாதிப்புகளை பார்வையிட்டார்.
பொன்னேரியில் மீனவர்களின் படகுகள் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு, அவர்களிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், அவர்களிடம் இருந்து மனுக்களையும் பெற்றுக் கொண் டார்.
அதன்பின், பொன்னேரி கோட் டாட்சியர் அலுவலகத்தில் அமைச் சர்கள் சி.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், எஸ்.பி.வேலுமணி, ஆர்.காமராஜ் மற்றும் அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தினார். மாவட்டத்தில் புயல் பாதிப்பு தொடர்பான அறிக்கை தயாரிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து சென்னை திரும்பிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்று காஞ்சிபுரத்துக்கு சென்று ஆய்வு செய்கிறார்.
சீரமைப்புப் பணியில் 22,758 பணியாளர்கள்
மரங்களை வெட்டி அகற்றும் பணிகளில் மாநகராட்சியின் 18 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கூடுதலாக வெளியூர்களில் இருந்து 1,758 பணியாளர்கள் வர வழைக்கப்பட்டுள்ளனர். சாய்ந்துள்ள மின் கம்பங்களையும், தெரு மின் விளக்குகளையும் சீரமைக்க, மின் வாரியம் சார்பில் கூடுதலாக 3 ஆயிரம் பணியாளர்கள் வெளியூர்களில் இருந்து வரவழைக்கப்பட உள்ளனர். தற்போது 27 நிவாரண முகாம் களில் 3 ஆயிரத்து 908 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.