குற்றவாளிகளை எளிதில் அடை யாளம் கண்டு கைது செய்ய செல்போன் ஆப் (செயலி) தயாராகி வருகிறது.
சென்னையில் குற்றங்களை தடுக்க பழைய குற்றவாளிகளின் பெயர், முகவரி, அவர்கள் மீதுள்ள வழக்கு உள்ளிட்ட தகவல் அடங்கிய செல்போன் ஆப்பை சென்னை போலீஸார் அறிமுகம் செய்ய உள்ளனர். இதற்கான பட்டியல் தயாராகி வருகிறது. இதன் மூலம் ஓர் இடத்தில் குற்றம் நடந்தால் அந்த ஆப் மூலம் எளிதாக கண்டுபிடித்து விட முடியும் என கூடுதல் ஆணையர் சேஷசாயி தெரிவித்துள்ளார்.