தமிழகம்

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலினின் தாய்மாமா வேண்டுகோள்

செய்திப்பிரிவு

திருவாரூர்: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கலகத் தலைவன்’ என்ற திரைப்படத்தை பார்க்க, திருவாரூரில் உள்ள திரையரங்கத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாய்மாமா தட்சிணாமூர்த்தி நேற்று குடும்பத்துடன் வந்திருந்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நடித்த பல நாடகங்களை பார்த்திருக்கிறேன். அவர் எடுத்த படங்களை அவருடன் அமர்ந்து பார்த்திருக்கிறேன். தற்போது அவர் பேரன் நடித்த படத்தையும் பார்க்க வந்திருக்கிறேன்.

எனக்கு இது பெருமையாக இருக்கிறது. தற்போது, உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் அணிச் செயலாளர், எம்எல்ஏ போன்ற பதவிகள் இருந்தாலும், அமைச்சர் பதவியையும் தந்து சிறப்பிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுகிறேன் என்றார்.

SCROLL FOR NEXT