திமுக தலைவர் கருணாநிதியை நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைர முத்து, காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர்.
திமுக தலைவர் கருணாநிதி, ஒவ்வாமை காரணமாக கடந்த இரு மாதங்களாக வீட்டில் சிகிச்சை பெற்று, ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில், ஊட்டச்சத்து, நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 1-ம் தேதி அனுமதிக்கப் பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து 8-ம் தேதி வீடு திரும் பினார்.
“நோய்த் தொற்று ஏற்படும் என்பதால் கருணாநிதியை யாரும் நேரில் சந்திக்க வர வேண்டாம்” என்று திமுக தலைமை கேட்டுக் கொண்டது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகி யோர் நேற்று கருணாநிதியை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர்.