எழும்பூர்-சேத்துப்பட்டு இடையே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
சென்னை கடற்கரை-தாம்பரம் ரயில் வழித்தடத்தில் எழும்பூர் - சேத்துப்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை அவ்வழியாக சென்ற ஒருவர் பார்த்து ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.
இதையடுத்து, ரயில்வே ஊழியர்கள் சம்பந்தப்பட்ட இடத் துக்குச் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு இரண்டு தண்ட வாளங்களை இணைக்கும் இணைப்புக் கம்பி விலகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பொதுவாக குளிர்காலத்தில் தண்டவாளங் களுக்கு இடையிலான இணைப்புப் பகுதி சுருங்குவதால் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதையடுத்து, ஊழியர்கள் அதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் தாம்பரம்-கடற்கரை மார்க்கத்தில் சென்ற மின்சார ரயில்கள் வழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் அவ்வழித் தடத்தில் ஒருமணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதை சீரமைக் கப்பட்டதும் அவ்வழியே ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால் காலை யில் அலுவலகங்களுக்குச் சென்ற ஊழியர்கள், பள்ளி மற்றும் கல்லூரிக்குச் சென்ற மாணவர்கள் உள்ளிட்டோர் சிரமத்துக்கு ஆளாயினர்.