தமிழகம்

சட்டப்பேரவை குழுக்களை அமைக்க காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கோரிக்கை: பேரவைச் செயலாளரிடம் மனு

செய்திப்பிரிவு

சட்டப்பேரவை குழுக்களை அமைக்க வேண்டும் என்று கோரி பேரவைச் செயலாளரிடம் காங் கிரஸ் எம்எல்ஏக்கள் மனு அளித்தனர்.

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல் வத்தை சந்தித்து, தொகுதி வளர்ச்சி நிதி ஒதுக்கவும் கோரிக்கை விடுத்தனர்.

தமிழக சட்டப்பேரவை காங் கிரஸ் தலைவர் கே.ஆர்.ராம சாமி தலைமையில் பிரின்ஸ், வசந்தகுமார், விஜயதரணி, கணேஷ் உள்ளிட்ட 9 எம்எல்ஏக்கள் நேற்று தலைமைச் செயலகம் வந்தனர். அவர்களுடன் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ முகமது அபுபக்கரும் வந்திருந்தார். அவர்கள் முதலில் சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீனை சந்தித்து மனு அளித்தனர். அதைத் தொடர்ந்து, நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தையும் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

இந்த சந்திப்பு தொடர்பாக நிருபர்களிடம் கே.ஆர்.ராமசாமி கூறியதாவது:

சட்டப்பேரவை கூட்டம் முடிந்து பல மாதங்களாகியும் இன்னும் 12 பேரவை குழுக்களும் அமைக்கப் படவில்லை. அதன் முக்கியத்துவம் கருதி உடனடியாக குழுக்களை அமைக்க வேண்டும் என்று பேரவைத் தலைவரிடம் மனு அளிப்பதற்காக வந்தோம். அவர் இல்லாததால் பேரவைச் செயலாளரை சந்தித்து மனு அளித்தோம். அதில், சட்டப்பேரவை விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக குழுக்களை அமைக்க வேண்டும் என கூறியுள்ளோம். குழுக்களை அமைக்க காலதாமதம் ஏற்படுவது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, ‘‘சூழல் காரணமாக செய்ய முடியவில்லை. நீங்கள் கொடுத்த மனுவை பேரவைத் தலைவரிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்கிறேன்’’ என்றார்.

குழுக்களை பொறுத்தமட்டில் எதிர்க்கட்சியினர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால்தான் அவர் கள் அமைக்க தயங்குவதாக எண்ணு கிறேன். குழுக்கள் அமைப்பதை தள்ளி வைக்கலாமே ஒழிய, அமைக்காமல் இருக்க முடியாது. குழுக்கள் அமைக்காவிட்டால் அடுத்தகட்டத்துக்கு செல்ல தயாராக உள்ளோம்.

தொடர்ந்து நிதியமைச்சரை சந்தித்தோம். வளர்ச்சித் திட்டங்கள் சரியாக செயல்பட நிதி ஒதுக்க வேண்டும். சில இடங்களில் சட்டப்பேரவை உறுப்பினர்களை அதிகாரிகள் மதிப்பதில்லை என்று அவரிடம் கூறினோம். மாவட்ட ஆட்சியர்களிடம் இது தொடர்பாக தகவல் கூறி இனி அவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்ள அறிவுறுத்துவதாக பன்னீர்செல்வம் கூறினார்.

இவ்வாறு ராமசாமி தெரிவித்தார்.

முஸ்லிம் லீக் எம்எல்ஏ முகமது அபுபக்கர் கூறும்போது, ‘‘சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதிக்கான பணிகளை விரைவில் செயல் படுத்துமாறு நிதியமைச்சரிடம் கூறினோம். பள்ளி வாசல்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியை அகற்ற காவல்துறையினர் கெடு பிடி செய்கின்றனர். இதற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என கோரினேன். மனுவை தலைமைச் செயலருக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக தெரி வித்தார்’’ என்றார்.

SCROLL FOR NEXT