மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்து சிபிஐ விசாரணை அவசியமில்லை என சமக தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சட்டசபைக்கு வெளியே நிருபர்களிடம் அவர் கூறும்போது, ‘‘மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்து விசாரணையில் இருக்கும்போது, பேரவையில் அதுபற்றி பேச முடியாது என பேரவைத் தலைவர் தெரிவித்துள்ளார். இதை, ஏற்றுக் கொள்ளாமல் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். விசாரணை முடிவு வருவதற்கு முன்பே, இப்படி செயல்படுவது சரியல்ல. கட்டிட விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை அவசியம் இல்லாதது’’ என்றார்.