தமிழகம்

சென்னை, புறநகரில் டிட்வா புயல் மீட்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் 900 தீயணைப்பு வீரர்கள்

செய்திப்பிரிவு

சென்னை: டிட்வா புயல் மீட்​புப் பணி​யில் ஈடுபட சென்னை மற்​றும் புறநகரில் 900 தீயணைப்​புப் படை வீரர்​கள் தயார் நிலை​யில் உள்​ளனர். மேலும் சென்னை காவல் துறை​யும் களத்​தில் இறங்​கி​யுள்​ளது.

இலங்கை அருகே உரு​வாகி​யுள்ள ‘டிட்​வா’ புயல் வட தமிழகம், புதுச்​சேரி, தெற்கு ஆந்​திர கடலோரப் பகு​தி​களை 30-ம் தேதி (ஞா​யிறு) அதி​காலை நெருங்​கும். இதையடுத்து இன்று (29-ம் தேதி) வட தமிழகத்​தில் பெரும்​பாலான இடங்​களில் கன முதல் மிக கனமழை பெய்​யக்​கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இதையடுத்து மீட்​புப் பணி​களில் ஈடு​படும் வகை​யில், முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக தீயணைப்​புத் துறை இயக்​குந​ரான டிஜிபி சீமா அகர்​வால் மேற்​பார்​வை​யில் அனைத்து தீயணைப்பு வீரர்​களும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

அதி முக்​கிய காரணங்​களை தவிர, விடுப்​பில் உள்ள அனை​வரும் பணிக்கு திரும்​ப​வும் உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. மேலும் 900 தீயணைப்​புப் படை வீரர்​கள் சென்னை மற்​றும் புறநகர் பகுதி என 17 இடங்​களில்தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்​பாக மழைநீர் அதி​கள​வில் தேங்​கும் ரெட்​டேரி ஜங்​ஷன், வேளச்​சேரி ராம் நகர், முடிச்​சூர், தாம்​பரம், குன்​றத்​தூர், மணலி புதுநகர், நந்​தம்​பாக்​கம் ஆகிய இடங்​கள் அடை​யாளம் காணப்​பட்டு அங்கு தீயணைப்​புப் படை வீரர்​கள் அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளனர்.

ரப்​பர் படகு, மரங்​களை வெட்​டும் கருவி​கள் உட்பட மீட்பு உபகரணங்​கள் அவர்​களுக்கு வழங்​கப்​பட்​டுள்​ளன. மேலும், திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் 2, செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் 2 இடங்​களி​லும் மீட்பு உபகரணங்​களு​டன் தீயணைப்பு வீரர்​கள் பணி​யில் உள்​ளனர்.

இது​மட்​டும் அல்​லாமல் பேரிடர் காலங்​களில் மக்​களைக் காப்​பாற்​றும் வகை​யில் சென்னை காவல் துறை அமைத்த காவல் பேரிடர் மீட்​புப் படை​யினரும், மீட்பு உபகரணங்​களு​டன் சென்​னை​யில் உள்ள 12 காவல் மாவட்​டங்​களி​லும் தயார் நிலை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளனர்​.

SCROLL FOR NEXT