சென்னை: அதிமுகவில் புதிதாக அளித்த கட்சி பதவிகள் வேண்டாம் என்று எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 9 எம்எல்ஏக்கள், கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இதுதொடர்பாக அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: நீங்கள் (பழனிசாமி) திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு எடுத்ததால், கட்சியை வலுப்படுத்த வேண்டிய கட்டாய சூழலில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கொள்கை போலவே, திமுக எதிர்ப்பில்வந்த தவெகவுக்கு 25 எம்எல்ஏக்கள் ஆதரவளிக்கும் சூழல் ஏற்பட்டது.
மீண்டும் கட்சியில் இணைந்தும், அவர்கள் வகித்து வந்த பதவிகளில் இருந்து திடீரென விடுவிக்கப்பட்டதால், அவர்கள் மிகுந்த மனச்சோர்வுடன் கட்சி பணியில் முழுவதும் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நீங்கள் தமிழக முதல்வராகவும் கட்சியின் பொதுச் செயலாளராகவும் அமர வைக்க வும், கட்சியின் மீது தொடரப்பட்ட வழக்குகளை எதிர்கொள்ளவும் முன் நின்ற சி.வி.சண்முகத்துக்கு எந்த பதவியும் வழங்கப்படாமல் ஒதுக்கி வைத்தது ஏற்றுக்கொள் ளக் கூடியதாக இல்லை. மேலும் பல நிர்வாகிகள், அவர்கள் வகித்து வந்த பொறுப்புகளில் மீண்டும் நியமிக்கப்படவில்லை.
அதிமுகவில் ஜெ அணி, ஜா அணிஎனஇருபிரிவுகளாகபிளவு ஏற்பட்டு, மீண்டும் இணைந்தபோது கட்சி பதவிகளில் இருந்து விலக்கப்பட்டவர்கள் மீண்டும் ஏற்கெனவே அவர்கள் வகித்து வந்த பதவிகளிலேயே தொடரும் வகையில் ஜெயலலிதா அறி விப்பு வெளியிட்டார்.
ஓ.பன்னீர் செல்வத்துடன் 12 எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், விலகிச் சென்று, மீண்டும் இணைந்தபோது மீண்டும் பழைய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டனர். ஆனால் நீங்கள் பழைய பொறுப்புகளை வழங்கவில்லை.
இதனால் கடந்த 50 நாட்களாக கட்சி நிர்வாகிகள், தொண் டர்கள் கட்சியிலிருந்து விலகி தவெகவில் தங்களை இணைத் துக் கொண்டு வருகின்றனர் நீங்கள் எடுத்த தவறான முடிவு களால் 2021, 2024, 2026 தேர்தல் களில் தொடர் தோல்வி ஏற்பட்டு கட்சி கரைந்து வருகிறது.
கீழ்க்கண்ட நாங்கள் யாவ ரும், ஜூன் 25-ம் தேதி வெளியிடப் பட்ட அறிவிப்பின்படி தாங்கள் வழங்கிய பதவிகளை ஏற்று கட்சிப்பணியாற்ற இயலாது. தாங்கள் நியமித்த பதவிகள் எங்களுக்கு வேண்டாம். நாங்கள் என்றும் கட்சி உறுப்பினராக இருந்து செயல்படுகிறோம். இவ்வாறுகடிதத்தில்கூறப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வ நாதன், பி.தங்கமணி, கே.பி.அன் பழகன், கே.சி.வீரமணி, அருண் மொழி தேவன், பாலகிருஷ்ண ரெட்டி, கிருஷ்ணமுரளி, எஸ்.எம். சுகுமார் ஆகிய 9 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.