உள்படம்: சந்தோஷ்சாமி

 
தமிழகம்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8-வது நபர் உடல் நலக்குறைவால் மரணம்

செய்திப்பிரிவு

ஊட்டி: கோட​நாடு கொலை, கொள்ளை வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்ட 8-வது நபர் சந்​தோஷ்​சாமி உடல் நலக்​குறை​வால் உயி​ரிழந்​தார்.

நீல​கிரி மாவட்​டம் கோட​நாடு எஸ்​டேட்​டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் கொள்ளை சம்​பவம் நடந்​தது. இதில், காவலாளி ஓம் பகதூர் கொலை செய்​யப்​பட்​டார்.

இது தொடர்​பாக பலர் மீது வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்​டது. முதன்மை குற்​ற​வாளி​யாக சேர்க்​கப்​பட்​டிருந்த ஜெயலலி​தா​வின் கார் ஓட்​டுநர் கனக​ராஜ் வாகன விபத்​தில் உயி​ரிழந்​தார்.

2-வது குற்​ற​வாளி​யாக சேர்க்​கப்​பட்​டிருந்த சயான் மற்​றொரு வாகன விபத்​தில் காயங்​களு​டன் உயிர் தப்​பி​னார்​.ஆ​னால், அவரின் மனை​வி​யும், பெண் குழந்​தை​யும் உயி​ரிழந்​தனர். கோட​நாடு எஸ்​டேட் கம்ப்​யூட்​டர் ஆப்​ரேட்​டர் தினேஷ் தற்​கொலை செய்​து​கொண்​டார். இந்த வழக்​கின் விசா​ரணை ஊட்​டி​யில் உள்ள மாவட்ட நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வரு​கிறது.

இந்த வழக்​கில் 8-வது குற்​ற​வாளி​யாக சேர்க்​கப்​பட்​டிருந்த சந்​தோஷ்​சாமி (52) உடல்​நலக்​குறைவு காரண​மாக உயி​ரிழந்​துள்​ளார். இவர் கேரள மாநிலம் திருச்​சூர் பகு​தியை சேர்ந்​தவர். கடந்த இரு வாரங்​களாக அங்​குள்ள மருத்​து​வ​மனை​யில் தீவிர சிகிச்​சை​யில் இருந்து வந்த சந்​தோஷ்​சாமி நேற்று முன்​தினம் இரவு உயி​ரிழந்​த​தாக அவரது வழக்​கறிஞர் சிவகு​மார் தெரி​வித்​தார்.

இதுகுறித்து முறை​யாக விசா​ரித்து நீதி​மன்​றத்​தின் கவனத்​துக்கு கொண்​டுச் சென்​று, குற்​றம் சாட்​டப்​பட்​டுள்​ளவர்​களின் எண்​ணிக்கை பட்​டியலை மாற்ற இருப்​ப​தாக அரசு தரப்பு வழக்​கறிஞர்​கள்​ தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT