ஆனைமலை அருகே குஞ்சி பாளையத்தில் மறுநடவு செய்வ தற்காக வேருடன் பிடுங்கப்பட்டு கிரேன் மூலம் கொண்டு செல்லப்பட்ட வேப்ப மரம். 
தமிழகம்

பொள்ளாச்சி | சாலை விரிவாக்க பணிக்காக அகற்றப்பட்ட மரம் மறுநடவு

செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி - திருச்சூர் சாலையில், ஆனைமலை அருகே குஞ்சிபாளையம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக 8 வயதுடைய வேப்ப மரத்தை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

இதனை அறிந்த இயற்கை ஆர்வலர்கள், மரத்தை வெட்டி அகற்றாமல், வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் மறுநடவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நேற்று மதியம் நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து பொக்லைன் இயந்திரம் உதவியுடன் மரத்தை வேருடன் அகற்றினர்.

அகற்றப்பட்ட வேப்பமரத்தை கிரேன் மூலம் தூக்கிச்சென்று வேறொரு இடத்தில் நட்டனர். மேலும் மரத்தின் வேர் பகுதியை கரையான் அரிக்காமல் இருக்க மருந்து போடப்பட்டது. மரத்தின் வெட்டப்பட்ட கிளைப்பகுதியில் சாக்குகளை சுற்றியும், தினமும் தண்ணீர் தெளித்தும் மரத்தை துளிர்க்கச் செய்யும் பணியை மேற்கொள்ள உள்ளதாக தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT