தமிழகம்

பார்த்தசாரதி கோயிலுக்கு சொந்தமான ரூ.40 லட்சம் மதிப்பிலான சொத்து மீட்பு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு சொந்தமாக டாக்டர் பெசன்ட் சாலையில் 200 சதுர அடி இடம் உள்ளது. இந்த இடத்தை ஜெயராமன் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து கடை கட்டி உள்ளார். இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஜெயராமன் மீது சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து அந்த ஆக்கிரமிப்பை அகற்ற ஜெயராமனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், உரிமையியல் நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் துணை ஆணையர் தலைமையில் நேற்று முன்தினம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான கோயில் சொத்து மீட்கப்பட்டது.

SCROLL FOR NEXT