தமிழகம்

புழக்கத்துக்கு வந்த 2-வது நாளிலேயே புதிய 500 ரூபாய்களுக்கு தட்டுப்பாடு: பொதுமக்கள் ஏமாற்றம்

செய்திப்பிரிவு

புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக் கத்துக்கு வந்த இரண்டாவது நாளி லேயே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள தால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மத்திய அரசு கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறி வித்ததையடுத்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிச் சென்றனர். இதனால் வங்கிகளில் கூட்டம் அலைமோதியது.

தொழில்நுட்ப காரணங்களால் ஏடிஎம்கள் மூலம் புதிய 2 ஆயி ரம் ரூபாய் நோட்டுகளை விநியோ கிக்க கால தாமதம் ஏற்பட்டது. இதனால் 100 ரூபாய் நோட்டுகள் மட்டுமே ஏடிஎம்களில் விநியோகிக் கப்பட்டன. அவை விரைவில் தீர்ந்துவிட்டதால் பல ஏடிஎம்கள் செயல்படாமலேயே இருந்தன. பின்னர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கள் ஏடிஎம்கள் மூலம் விநியோகிக் கப்பட்டன. ஆனால் அதிக மதிப்பு காரணமாக அதற்கு சில்லறை பெறுவதில் சிக்கல் நீடித்தது.

எனவே புதிய 500 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்பட் டால்தான் இப்பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும் எனக் கூறப்பட்டது. அதன்படி தமிழகத்துக்கு புதிய 500 ரூபாய் நோட்டுகள் வந்ததாக தகவல் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று முன்தினம் சென்னையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் சில குறிப் பிட்ட ஏடிஎம்-களில் மட்டும் 500 ரூபாய் நோட்டுகள் விநியோகிக் கப்பட்டன.

இதைத் தொடர்ந்து நேற்று மற்ற எல்லா வங்கிகளிலும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், 2-வது நாளான நேற்று சென்னையில் எந்த வங்கியிலும் 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, பாரிமுனையில் உள்ள பொதுத்துறை வங்கி ஏடிஎம்முக்கு பணம் எடுக்க வந்த கேசவன் என்பவர் கூறும்போது, “சென்னையில் நேற்று (நேற்று முன்தினம்) பாரத ஸ்டேட் வங்கியின் சில ஏடிஎம்களில் 500 ரூபாய் நோட்டுகள் கிடைப்பதாக தகவல் வெளியானது. இனிமேல் எல்லா வங்கி ஏடிஎம்களிலும் 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என நம்பி பணம் எடுக்க வந்தேன். ஆனால், 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்கவில்லை. இது ஏமாற்றத்தை அளித்துள்ளது” என்றார்.

இதுகுறித்து, ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “ரூ.5 கோடி அளவுக்கு புதிய 500 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு வந்தன. முதற்கட்டமாக அவற்றை பாரத ஸ்டேட் வங்கிக்கு அனுப்பி வைத்தோம். அதன் பிறகு புதிய நோட்டுகள் ஏதும் வராததால் பிற வங்கிகளுக்கு அனுப்ப முடியவில்லை. 100 ரூபாய் நோட்டுகளும் போதிய அளவுக்கு வரவில்லை. இதனால் வங்கிகளில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. புதிய நோட்டுகள் வரும்பட்சத்தில் அவற்றை விரைவாக வங்கிகளுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண் டுள்ளோம்” என்றார்.

SCROLL FOR NEXT