தமிழகம்

தென் தமிழகத்தில் மழை பெய்யும்

செய்திப்பிரிவு

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில், மத்திய வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, தற்போது இலங்கை அருகே நிலைகொண்டுள்ளது.

இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழை ஒரு சில இடங்களில் பெய்யக்கூடும்.

சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பாம்பனில் 5 செ.மீ., வேதாரண்யத்தில் 4 செ.மீ., ராமேஸ்வரத்தில் 2 செ.மீ., ராமநாதபுரத்தில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT