பிஎஸ்சி யோகா, இயற்கை மருத் துவப் படிப்புக்கான கலந்தாய்வில் கள்ளக்குறிச்சி எஸ்விஎஸ் கல் லூரியின் பெயரையும் சேர்க்கு மாறு இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி சிறப்பு ஆணை யருக்கு சென்னை உயர் நீதி மன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக் குறிச்சியில் உள்ள எஸ்விஎஸ் யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேர் கடந்த ஜனவரி மாதம் மர்மமான முறையில் இறந்தனர். இதையடுத்து, கல் லூரி மூடப்பட்டு நிர்வாகிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப் பட்டது. கல்லூரிக்கு வழங்கிய இணைவிப்பை (அஃபிலியேஷன்) எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகம் ரத்து செய்தது.
இந்நிலையில், நடப்பு கல்வி யாண்டில் ஐந்தரை ஆண்டுகால யோகா, இயற்கை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு பட்டியலில் இக்கல்லூரியின் பெய ரையும் சேர்க்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் கல்லூரி நிர்வாகம் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.ராஜேந்திரன், கடந்த நவம்பர் 7-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடக்கும் 2016-17ம் ஆண்டுக்கான பிஎஸ்சி இயற்கை, யோகா மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் எஸ்விஎஸ் கல்லூரியின் பெயரை யும் சேர்க்குமாறு இந்திய மருத்து வம் மற்றும் ஹோமியோபதி சிறப்பு ஆணையருக்கும், எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத் துக்கும் இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் அவர் தனது உத்தரவில் கூறியதாவது:
யோகா, இயற்கை மருத்து வத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டியுள்ளது. இந்த சூழலில் இக்கல்லூரியை கலந்தாய்வில் இருந்து ஒதுக்கினால் அந்த இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும். இக்கல்லூரிக்கு இணை விப்பு வழங்குவது தொடர்பாக தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் அடங்கிய முதல் அமர்வும், ஹோமியோபதி படிப்புகளை தொடர்ந்து நடத்துவது தொடர்பாக நீதிபதிகள் ஹுலுவாடி ஜி.ரமேஷ், வி.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய 2-வது அமர் வும் ஏற்கெனவே உத்தரவுகள் பிறப்பித்துள்ளன. அவற்றின் அடிப்படையில் இந்த உத்தரவும் பிறப்பிக்கப்படுகிறது.
நிர்வாகத்துக்கு நிபந்தனை
ஆனால் மாணவர் சேர்க்கை, கலந்தாய்வின்போது, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரத்தை மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் தெளிவாக தெரிவிக்க வேண்டும். மாணவர் சேர்க்கையானது அந்த வழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்பதையும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.