தமிழகம்

பொன்னேரி அருகே 88 பேருக்கு ரூ.41 லட்சம் பயிர் கடன்: அமைச்சர்கள் வழங்கினர்

செய்திப்பிரிவு

பொன்னேரி அருகே கிருஷ் ணாபுரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் 88 பேருக்கு ரூ.40.60 லட்சம் மதிப்புள்ள பயிர் கடனுதவிகளை பள்ளிக் கல்வி விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் பாண்டியராஜன், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் நேற்று வழங்கினர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் நேற்று விவசாய பயிர் கடன் வழங்கும் விழா நடந்தது.

இதில், 88 பேருக்கு 40 லட்சத்து 60 ஆயிரத்து 321 ரூபாய்க்கான பயிர் கடனுதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

பின்னர் அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது: மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங்களிலும் கூட்டுறவு சங்கங்களில் 4 லட்சம் கோடி ரூபாய் நிதி சேமிக்கப்பட்டுள்ளது. இதில் 52 ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களில் சேமிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இரண்டு முறை 100 மில்லியன் மெட்ரிக் டன்னுக்கு மேல் நெல் பயிர் விளைவிக்கப்பட்டுள்ளது.

வரும் காலத்தில் 142 மில்லியன் மெட்ரிக் டன் நெற் பயிர் விளைவிக்க தமிழக அரசு விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமைச்சர் பெஞ்சமின் பேசிய தாவது:

தமிழக முதல்வர் வாக்குறுதி அளித்தபடி அனைத்து சிறு மற்றும் குறு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளார். விவசாயம் என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பு என்பதை கருத்தில் கொண்டு விவசாயத்துக் கும் விவசாயிகளுக்கும் விலை யில்லா இடு பொருட்கள், மானியம் போன்ற பல நல்ல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, திருவள்ளூர் எம்பி வேணுகோபால், பொன்னேரி எம்எல்ஏ பலராமன், பொன்னேரி சார் ஆட்சியர் தண்டபாணி, கூட்டுறவு சங்கங் களின் இணைப்பதிவாளர் செந் தில்குமார், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் ஜெயபால், திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் சின்னசாமி உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

SCROLL FOR NEXT