தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரே நாளில் ரூ. 278 கோடி மதிப்புக்கு 2 லட்சத்து 72 ஆயிரத்து 398 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல் தலைவரும், உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதியுமான அணில் ஆர்.தேவ் உத்தரவுப்படி நாடு முழுவதும் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை தேசிய லோக் அதாலத் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல் தலைவரும், உயர் நீதிமன்ற நீதிபதியுமான ஹூலுவாடி ஜி.ரமேஷ் ஆகியோரது ஆலோசனையின்படி நேற்று தமிழகம் முழுவதும் தேசிய லோக் அதாலத் நடத்தப்பட்டது. இதில் போக்குவரத்து, மின்சாரம், குடிநீர், தொலைபேசி, மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சொத்து வரி, திருமணம் தொடர்பான பிரச் சினைகள், தொழிலாளர் நலன், வங்கி மற்றும் பொதுமக்கள் பயன் பாடு தொடர்புடைய நிலுவை வழக்குகள் மற்றும் நீதிமன்ற விசார ணைக்கு வராத முந்தைய வழக்குகள் என மொத்தம் 5 லட் சத்து ஆயிரத்து 375 வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப் பட்டன.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.கோகுல்தாஸ், ஆர்.சுப்பிரமணி யன், ஆர்.சுரேஷ்குமார், சி.வி.கார்த்திகேயன் ஆகியோரது தலைமையிலும், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எஸ்.விமலா, கே.கல்யாணசுந்தரம் ஆகியோரது தலைமையிலும் வழக்குகள் விசாரிக்கப்பட்டன. சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவர் நீதிபதி எஸ்.மணிக்குமார் லோக் -அதாலத் பணிகளை மேற் பார்வையிட்டார். இதேபோல் மாநிலம் முழுவதும் மொத்தம் 460 அமர்வுகள் வழக்குகளை விசாரித் தன. இதில் மொத்தம் ரூ. 278 கோடியே 39 லட்சத்து 62 ஆயிரத்து 969 மதிப்புக்கு 2 லட்சத்து 72 ஆயிரத்து 398 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.
லோக் அதாலத்துக்கான ஏற்பாடுகளை மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் ஆர்எம்டி. டீக்காராமன் தலைமையில் மாவட்ட மற்றும் தாலுகா அளவிலான சட்டப்பணிகள் ஆணைக்குழுவினரும், நீதித்துறை ஊழியர்களும் செய்திருந்தனர்.