பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் நாமக்கல் வடக்கு நல்லிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாற்றுத் திறன் மாணவி மதுமிதாவுக்கு, ஆட்சியர் ஸ்ரேயா சிங் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். 
தமிழகம்

பாராலிம்பிக்கில் பங்கேற்க அரசுப் பள்ளி மாணவி தேர்வு: நாமக்கல் ஆட்சியர் கவுரவிப்பு

செய்திப்பிரிவு

நாமக்கல்: பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ள அரசுப் பள்ளி மாற்றுத் திறன் மாணவிக்கு, நாமக்கல் ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

நாமக்கல் வடக்கு நல்லிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று குழந்தைகள் தின விழா நடைபெற்றது. விழாவுக்கு, ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார். தொடர்ந்து, ஆட்சியர் தலைமையில், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள், குழந்தைகள் தின உறுதிமொழியை ஏற்றனர்.

கடந்த மாதம் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்று பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற மாற்றுத் திறன் மாணவி ம.மதுமிதாவுக்கு, ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

மேலும், குழந்தைகள் தினத்தை சிறப்பிக்கும் வகையில் மாணவி மதுமிதா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். விழாவில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT