விழுப்புரத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை ஆய்வு செய்த அமைச்சர் முத்துசாமி. 
தமிழகம்

தமிழ்நாடு முழுவதும் 60 இடங்களில் 50 வருட உத்தரவாதத்துடன் 10,000 குடியிருப்புகள்: அமைச்சர் உறுதி

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு முழுவதும் 60 இடங்களில் 50 வருட உத்தரவாதத்துடன் 10 ஆயிரத்துக்கும் அதிகமான குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன என விழுப்புரத்தில் அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.

தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று விழுப்புரம் மாவட்டம் மகாராஜபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் இரு இடங்களில் வீட்டு வசதி வாரியத்துறை சார்பாக கட்டப்பட்ட வாடகை குடியிருப்புகள் உள்ளன. அதில், பானாம்பட்டு வாரிய நிலத்தில் 72 வீடுகள் 2 ஏக்கர் 68 சென்ட்டில் கட்டப்பட்டுள்ளன. மகாரா ஜபுரத்தில் 120 வீடுகள் 3 ஏக்கர் 1 சென்ட்டில் கட்டப்பட்டுள்ளன. இரு இடங்களிலும் உள்ள கட்டிடங்கள் மோசமாக பழுதடைந்துள்ளது. ஏற்கெனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் வீட்டுவசதி வாரியத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்து கட்டிடம் குடியிருப்பதற்கு தகுதியற்றது என கருதி சீல் வைக்கப்பட்டது.

இங்கு எவ்வளவு வீடுகள் தேவை, என்னென்ன வகையிலான வீடுகள் தேவை என மாவட்ட நிர்வாகத்துறை சார்பாக கணக்கெடுத்து கூறுவார்கள். அதற்கேற்பஇப்பகுதியில் திட்டங்கள் வகுக்கப்பட்டு வீடுகள் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். ஏற் கெனவே 96 ஆயிரம் சதுர அடிபரப்பளவில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இப்போது இதுபோல 2 அல்லது 3 மடங்கு அளவில் கட்டிடங்கள் கட்டுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

தமிழ்நாட்டில் கடந்த 1999-ம் ஆண்டு 60 இடங்களில் கட்டப்பட்ட வாடகை குடியிருப்புகள் குறுகியகாலத்திற்குள்ளாகவே பழுந்தடைந்துவிட்டதால், அவை மோசமானநிலையில் உள்ளன. அதனடிப் படையில் தற்போது குடியிருப்பு கட்டிடங்கள் முழுமையாக இடிப்பதற்கான உத்தரவு வழங்கி யதன் பேரில் பணிகள் தொடங் கப்படவுள்ளது. இப்பகுதிகளில் வீடுகள் கட்டுவதற்கு நீண்ட காலங்கள் எடுத்துக் கொள்ளாமல் விரைந்து வீடுகள் கட்டுவதற்கான திட்டங்களை வகுத்து, எவரும் பாதிக்காத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

உடனடியாக வீடுகள் கட்டுவதற்கானநடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது. அதனடிப்படையில் திட்டங் கள் வகுக்கப்பட்டு வருகிறது. ஒரே கட்டமாக 60 இடங்களிலும் 50 வருட உத்தரவாதத்துடன் 10 ஆயிரத்திற்கும் அதிமான குடியி ருப்புகள் கட்டப்படவுள்ளன. கட்டப்படும் குடியிருப்புகள் தரத்துடன் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். மேலும், குடியிருப்பவர்களும் சரியான முறையில் அவ்வப்போது பராமரித்து வந்தால் வீடுகள் நல்ல உறுதியுடன் அமையும் என்றார்.ரவிக்குமார் எம்பி, எம்எல்ஏக்கள் நா.புகழேந்தி, லட்சுமணன், ஆட்சி யர் மோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT