தமிழகம்

மதுரையில் 57 மி.மீ. மழை பதிவு: தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது

செய்திப்பிரிவு

மதுரை: மதுரையில் 2 நாட்கள் பெய்த தொடர் மழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம்(மி.மீ.ல்): சிட்டம்பட்டி 16.2, கள்ளந்திரி 19.2, தனியாமங்கலம் 18, மேலூர் 23, சாத்தியார் அணை 27, வாடிப்பட்டி 45, திருமங்கலம் 54.6, உசிலம்பட்டி 22, மதுரை 53, விமான நிலையம் 57.2, விரகனூர் 33.4, இடையபட்டி 25, புலிப்பட்டி 18.6, சோழவந்தான் 24, மேட்டுப்பட்டி 23.8, கள்ளிக்குடி 10.6, பேரையூர் 45.2, ஆண்டிபட்டி 37.2, எழுமலை 25.2.

நேற்று பிற்பகல் 2 மணி வரை அவ்வப்போது மழை பெய்தது. 2 நாட்கள் தொடர்ந்து மழை பெய்ததால் நகரின் பெரும்பாலான மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதனால் மக்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியாதவாறு வீட்டிலேயே முடங்கினர். தொடர்ந்து 2-வது நாளாகவும் தொடர் மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT