கல்வராயன்மலை பெரியார் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்த வெள்ள நீர். 
தமிழகம்

கல்வராயன்மலையில் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலையில் தரைப் பாலம் மூழ்கியதால் 15 கிராமங் களுக்கு போக்குவரத்து துண்டிக் கப்பட்டது. பெரியார் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து வரும் நீரால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சாலை பிரச்சினைகளை தீர்ப்போம் - ஆட்சியர் உறுதி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமாரிடம் இதுபற்றி கேட்டபோது, “நான் இங்கு பொறுப்பேற்றது முதல், தொடர்ந்து இப்பகுதியை பார்வையிட்டு, பிரச்சினைகளை ஆராய்ந்து வருகிறேன். சாலை பிரச்சினைகளைத் தீர்க்க வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினரின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. தொரடிப்பட்டில் உயர்மட்டப் பாலத்தை தாட்கோ மூலம் செயல்படுத்தவுள்ளோம்.

அடுத்தாண்டு, மழைக் காலத்திற்குள் இத்திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துவிடும். இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மாவட்டத் தொழில் மையத்தின் முகமை அமைத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்த திட்டம் தயாரித்து வருகிறோம்” என்றார்.

SCROLL FOR NEXT