தமிழகம்

தி.நகர் பெண் கொலை வழக்கு: பெங்களூரு விரைந்தனர் தனிப்படை போலீஸார்

செய்திப்பிரிவு

தி.நகரில் தனியாக வசித்த பணக்கார பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை நடத்த தனிப்படை போலீஸார் பெங்களூரு சென்றுள்ளனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சென்னையில் தனியாக வசிக்கும் முதியவர்களை பாதுகாக்கும் திட்டத்தை மீண்டும் முழுமையாக செயல்படுத்த அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள் ளது. தி.நகரில் சாந்தி (66) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் பல தகவல்கள் கிடைத்துள்ளன. கொலை சம்பவம் நடந்த அன்று 2 நபர்கள் வீட்டில் இருந்து வெளியே செல்வது பதிவாகியுள்ளது. சாந்திக்கு பெங்களூரிலும் சொத்துகள் உள்ளன. அந்த சொத்தில் சில பிரச்சினைகள் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, இதுகுறித்து விசாரணை நடத்தவும், கண்காணிப்பு கேமராவில் பதிவான நபர்கள் குறித்த தகவல்களை சேகரிக்கவும் தனிப்படை போலீஸார் பெங்களூரு விரைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT