பிரதமர் மோடியை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின் 
தமிழகம்

பிரதமர் மோடிக்கு ‘பொன்னியின் செல்வன்’ நாவலை பரிசளித்த முதல்வர் ஸ்டாலின்

செய்திப்பிரிவு

மதுரை: பிரதமர் மோடிக்கு ‘பொன்னியின் செல்வன்’ நாவலின் ஆங்கிலப் பதிப்பை பரிசளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.

காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் வந்தடைந்தார் பிரதமர் மோடி. திண்டுக்கல் வந்த அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் எல்.முருகன், கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் வரவேற்பு அளித்தனர். அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு ‘பொன்னியின் செல்வன்’ நாவலின் ஆங்கிலப் பதிப்பை அளித்து வரவேற்றார்.

இதனைத் தொடர்ந்து ஹெலிபேட் தளத்தில் இருந்து கார் மூலம் பட்டமளிப்பு விழா நடைபெறும் பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் வழியில் பிரதமர் மோடிக்கு ஏராளமான பாஜகவினர் நீண்ட வரிசையில் நின்று வரவேற்பு அளித்தனர். விழாவுக்கு வருகை தந்த பிரதமர் மோடி, காத்திருந்த பொதுமக்களை பார்த்தவுடன், காரில் இருந்து வெளியே வந்து கூடியிருந்த மக்களைப் பார்த்து உற்சாகமாக கைகளை அசைத்தார்.

SCROLL FOR NEXT