மதுரை: பிரதமர் மோடி திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இன்று பிற்பகல் 2.50 மணியளவில் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தருகிறார். அவரை வரவேற்க மதுரை விமான நிலையத்தின் உள்ளே தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் காத்திருக்கின்றனர்.
பிரதமர் மோடிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மூர்த்தி உள்ளிட்டோர் வரவேற்பு அளிக்கிறார்கள்.
அதன் பிறகு 3 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் புறப்படுகிறார். 3:30-க்கு திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 4:30 மணிக்கு மேல் திண்டுக்கல்லில் இருந்து கிளம்பும் பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் 5:00 மணியிலிருந்து 5:30 மணிக்குள்ளாக மதுரை விமான நிலையம் வந்தடைகிறது. அதன் பின்பு விமானம் மூலமாக மோடி விசாகப்பட்டினம் செல்கிறார்.