கொட்டும் மழையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை வரவேற்க காலை முதல் காத்திருக்கும் தொண்டர்கள் | படம் நா. தங்கரத்தினம் 
தமிழகம்

திண்டுக்கல் | பிரதமர் மோடி வருகைக்காக கொட்டும் மழையில் காத்திருந்த தொண்டர்கள்

செய்திப்பிரிவு

திண்டுக்கல்: திண்டுக்கல் காந்தி கிராம் பல்கலை. வரும் பிரதமர் மோடியை வரவேற்க கொட்டும் மழையில் தொண்டர்கள், பொதுமக்கள் காத்திருந்தனர்.

திண்டுக்கல் அருகேயுள்ள காந்தி கிராம கிராம் பல்கலை.யில் இன்று மாலை நடைபெறும் 36-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர், அங்கிருந்து தனி விமானம் மூலம் பிற்பகல் 2.30 மணிக்கு மதுரை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காந்தி கிராமம் அருகே அம்பாத்துரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்தில் இறங்குகிறார். அங்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், பிரதமரை வரவேற்கின்றனர். தொடர்ந்து, பல்கலை. வளாகத்துக்கு காரில் செல்லும் பிரதமர், பிற்பகல் 3 மணிக்கு பல்கலை. வளாகத்தில் உள்ள பல்நோக்கு கூட்ட அரங்கில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.

பிரதமர் மற்றும் முதல்வரை வரவேற்க காலை முதலே காந்தி கிராம் பல்கலை. எதிரே உள்ள சாலையில் பாஜக மற்றும் திமுகவினர், பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடைபிடித்தபடி, மேள தாளங்களுடன் காத்திருந்தனர்.

ஆ.நல்லசிவன்

SCROLL FOR NEXT