தமிழகம்

கனமழை | புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தில் மேலும் 4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

செய்திப்பிரிவு

சென்னை: வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் நிலையில், காஞ்சிபுரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டள்ளது.

அதன்படி, இரவு முதல் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. கனமழையை அடுத்து ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவாரூர், நாகை, தஞ்சை, மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

தற்போது, கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அளித்து புதுச்சேரி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், அரியலூர், பெரம்பலூர், கடலூர் , விழுப்புரம் மாவட்டங்களிலும் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT