தமிழகம்

தீவிரவாத சிந்தனை கொண்டவர்கள் வேரூன்றிவிட்டனரோ? - அண்ணாமலை அச்சம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவையில் நடந்தது தற்கொலை தாக்குதலுக்கான முயற்சி என கடந்த 2 வாரங்களாக தமிழக பாஜக சொன்னதை தற்போது என்ஐஏ உறுதிபடுத்தியுள்ளது. இனியும் அங்கு நடந்தது சிலிண்டர் விபத்து என மக்களை திமுக அரசு ஏமாற்ற முடியாது.

குறிப்பாக அந்தச் சம்பவத்தை குண்டு வெடிப்பு என்றே என்ஐஏ அழைத்துள்ளது. இந்தத் தற்கொலை தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு நடைபெற்ற சோதனையின்போது பல திடுக்கிடும் ஆதாரங்கள் சிக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தீவிரவாத சிந்தனை கொண்டவர்கள் வேரூன்றிவிட்டார்களோ என்ற அச்சம் எழுகிறது. தமிழக காவல்துறையின் உளவுப் பிரிவின் செயலற்ற தன்மையால் நிகழவிருந்த பெரும் உயிர் சேதத்தில் இருந்து நம்மை இறைவன்தான் காப்பாற்றினார். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT