கோவையில் முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம் வீட்டுக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். 
தமிழகம்

கோவை தங்கம் குடும்பத்துக்கு முதல்வர் ஆறுதல்

செய்திப்பிரிவு

கோவை: கோவைக்கு நேற்று வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அண்மையில் காலமான முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கம் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் நடக்கும் விழாக்களில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை கோவை வந்தார்.

விமான நிலையத்தில் முதல்வரை, அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், சு.முத்துசாமி, செந்தில்பாலாஜி, கயல்விழி செல்வராஜ், ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன், மேயர் கல்பனா, ஆணையர் மு.பிரதாப் உள்ளிட்டோர் வரவேற்றனர். வரவேற்பு நிகழ்வில் திமுக மாவட்டச் செயலாளர்கள் நா.கார்த்திக், தொ.அ.ரவி, தளபதி முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், சாயிபாபா காலனியை அடுத்த கே.கே.புதூரில் உள்ள கிருஷ்ணா நகருக்குச் சென்றார். அங்கு, அண்மையில் காலமான முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம் வீட்டுக்குச் சென்ற முதல்வர், அவரது மகன், மகள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். கோவை தங்கத்தின் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், ஈரோட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.

SCROLL FOR NEXT