தமிழகம்

நாளை தொடங்கும் வந்தே பாரத் ரயில்; சென்டரலில் இருந்து அதிகாலை 5.50-க்கு புறப்படும்: புதன்கிழமை இயங்காது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை சென்ட்ரல் - மைசூர் இடையே ‘வந்தே பாரத்’ ரயிலின் வழக்கமான சேவை நாளை (நவ.12) தொடங்குகிறது. அதிநவீன வசதிகளுடன் கூடிய 4 வந்தே பாரத் ரயில்கள் வெவ்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன. இந்த வரிசையில் 5-வது வந்தே பாரத் ரயில்சேவையை பெங்களூரில் பிரதமர்மோடி இன்று (நவ.11) காலை11 மணிக்கு தொடங்கி வைக்கிறார். அதிநவீன வசதிகள், மேம்பட்டபாதுகாப்பு தொழில்நுட்பம் உட்படபல்வேறு வசதிகளைக் கொண்ட இந்த ரயிலில் 16 பெட்டிகள் உள்ளன.1,128 பேர் அமர்ந்து செல்ல முடியும்.

புதன்கிழமை இயங்காது: வந்தே பாரத் ரயிலின் வழக்கமான சேவை சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூருக்கு நாளை(நவ.12) தொடங்குகிறது. இந்த ரயில் புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும். சென்னைசென்ட்ரலில் இருந்து அதிகாலை 5.50 மணிக்கு வந்தே பாரத் விரைவுரயில் (20607) புறப்பட்டு, மைசூரைநண்பகல் 12.20 மணிக்கு அடையும்.இந்த ரயில் காட்பாடியில் காலை 7.21 மணிக்கும், கேஎஸ்ஆர் பெங்களூருவில் காலை 10.20 மணிக்கும் நின்று செல்லும்.

முன்பதிவு தொடங்கிவிட்டது: மறுமார்க்கமாக, மைசூரில் இருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்பட்டு, அதேநாள் இரவு 7.30 மணிக்குசென்னை சென்ட்ரலை வந்தடையும். கேஎஸ்ஆர் பெங்களூருவில் பிற்பகல் 2.55 மணிக்கும், காட்பாடி சந்திப்பில் மாலை 5.36 மணிக்கும் நின்று செல்லும். வந்தே பாரத் ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது. இந்த ரயிலில் பயணிக்க எந்தவித சலுகையும் கிடையாது. முன்பதிவு, பயணத்தை ரத்து செய்தல், பணத்தை திரும்பப் பெறுதல் போன்றவற்றுக்கான பிற விதிமுறைகள் சதாப்தி ரயிலின்படி இருக்கும்.

இது, தென்னிந்தியாவின் முதலாவது வந்தே பாரத் விரைவு ரயில் என்பது குறிப்பிடத்தக்கது. மைசூரு, பெங்களூரு மற்றும்சென்னை இடையே போக்குவரத்தை இந்த ரயில் மேம்படுத்தும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

கட்டண விவரம்: சென்னை சென்ட்ரல் – மைசூருவுக்கு ‘ஏசி’ சேர் கார் கட்டணம் ரூ,1,200-ம், ‘ஏசி’ சிறப்பு வகுப்பு பெட்டி கட்டணம் ரூ.2,295 எனவும், காட்பாடிக்கு ‘ஏசி’ சேர் கார் கட்டணம் ரூ.495, சிறப்பு வகுப்பு பெட்டி ரூ.950 எனவும், கே.எஸ்.ஆர். பெங்களூருக்கு ‘ஏசி’ சேர் கார் கட்டணம் ரூ.995, சிறப்பு வகுப்பு பெட்டி ரூ.1,885 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT