சென்னை: சென்னை - பெங்களூரு - மைசூரு ‘வந்தே பாரத்’ ரயில் முன்பதிவு தொடங்கியுள்ளது. சதாப்தி ரயிலை விட ரூ.200 அதிகமாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் 5-வது வந்தே பாரத் ரயிலை சென்னை - பெங்களூரு - மைசூரு வழித்தடத்தில் நாளை (நவ.11) பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த ரயில் வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படவுள்ளது. இதன்படி புதன்கிழமை தவிர்த்து அனைத்து நாட்களிலும் இந்த வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது. இந்நிலையில், 12-ம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
சென்னையில் இருந்து காலை 5.50 மணி புறப்படும் வந்தே பாரத் ரயில், காலை 10.25 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது. இதனைத் தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு மைசூரு சென்றடைகிறது. இந்த ரயில் காட்பாடி, கேஎஸ்ஆர் பெங்களூரு ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலின் பயணக் கட்டண விவரம்:
சென்னையில் இருந்து மைசூருவிற்கு ஏற்கெனவே சதாப்தி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சென்னையில் இருந்து மைசூரு செல்ல chair car வகுப்பில் ரூ.1000, executive car வகுப்பில் ரூ.1980 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தற்போது சதாப்தி ரயிலை விட 20 நிமிடம் மட்டுமே சீக்கிரமாக வந்தே பாரத் ரயில் மைசூரு சென்றடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.