தமிழகம்

10% இடஒதுக்கீட்டை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்: தமிழ்நாடு பிராமண சமாஜம் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

பழநி: 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தி தமிழக அரசு சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என தமிழ்நாடு பிராமண சமாஜம் நிறுவன மாநிலத் தலைவர் நா.ஹரிஹரமுத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொது பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீட்டால் தமிழகத்தில் பிராமணர் மட்டுமின்றி கிறிஸ்தவர்கள் உட்பட 78 சமூகங்களைச் சேர்ந்தோர் பயனடைவர். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை விட்டுவிட்டு முழுமையான சமூக நீதியை நிலை நாட்ட இயலாது.

இந்த இட ஒதுக்கீடு முழுமையான சமூக நீதியை நிலை நாட்டுகிறது. எனவே, 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு அமல்படுத்தி முழுமையான சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT