தமிழகம்

இறைச்சிக் கடை ஊழியர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்: போலீஸார் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை: திண்டுக்கல் மாவட்டம், பேகம் பூரைச் சேர்ந்த ஹாஜிரா பானு உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

எனது கணவர் சிக்கந்தர். மாற்றுத்திறனாளி. இதே பகுதி இறைச்சிக் கடையில் உதவியாளராக இருந்தார். கடந்த செப்டம்பர் 25 அதிகாலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த எனது கணவரை 10-க்கும் மேற்பட்ட போலீஸார் அடித்து இழுத்துச் சென்றனர். பின்னர் அவரை திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். அவரை சந்திக்க முயற்சித்தும் முடியவில்லை.

அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது சட்ட விரோதம். அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளதாக தொிகிறது. சட்ட விரோதமாக எனது கணவரைக் கைது செய்து சிறையில் அடைத்த போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது கணவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. பின்னர் இந்த வழக்கு குறித்து சம்பந்தப்பட்ட போலீஸார் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT