மதுரை: இயற்கை முறையில் பூச்சிக்கொல்லி இல்லாத கொய்யா விளைவித்த உசிலம்பட்டி பெண் விவசாயிக்கு வேளாண்மைத்துறை அமைச்சர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
சென்னை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநரகத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தலைமையில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இயற்கை விவசாயிகளும் பங்கேற்றனர். அதில் மதுரை உசிலம்பட்டி பெண் விவசாயி சரஸ்வதியின் அங்ககப் பண்ணையில் விளைந்த கொய்யாக்கனியை எஞ்சிய பூச்சிக்கொல்லி பகுப்பாய்வுக்குட்படுத்தினர். இதில் எஞ்சிய பூச்சிக்கொல்லி எதுவும் காணப்படவில்லை என உறுதி செய்யப்பட்டு, இதற்கான ஆய்வு முடிவறிக்கையும் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில் அமைச்சர் பன்னீர்செல்வம், பெண் விவசாயி சரஸ்வதிக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.