சென்னை: தமிழக அரசுத் துறைகளில் காலியாகவுள்ள 5,529 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த மே 21-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 9 லட்சத்து 94,890 பேர் எழுதினர். இதற்கிடையே உயர் நீதிமன்ற உத்தரவின்படி மகளிருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பாக மென்பொருளில் மாற்றங்கள் செய்யும் பணிகள் நடைபெற்று வந்ததால் தேர்வு முடிவுகள் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் குரூப் 2 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி நேற்று இரவு வெளியிட்டது. தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சியின் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். அதன்படி முதல்நிலைத் தேர்வு எழுதியவர்களில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தற்போது முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வில் பங்கேற்க வேண்டும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
முதன்மைத் தேர்வுக்கு தகுதியானவர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.200 இ-சேவை மையத்தில் நவம்பர் 17 முதல் டிசம்பர் 16-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.