தமிழகம்

சென்னையில் போலீஸ் அதிகாரிகள் உருவாக்கிய வாட்ஸ்அப் குழுக்கள்: குற்றங்களை குறைக்க புதிய நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னையில் குற்றங்களை தடுக்கவும், குற்றச் செயல்கள் குறித்த தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்துகொள்ளவும் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப் பட்டுள்ளன.

குற்றங்கள் தொடர்பான தகவல்களை போலீஸார் வாக்கி டாக்கி மூலம் உடனுக்குடன் பகிர்ந்துகொள்வர். இதன் அடிப் படையில், சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்துவார். பெரிய அசம்பாவித சம்பங்கள், கொலை, கொள்ளை, கலவரம் என்றால் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் செல்வார்கள்.

அனைத்து தகவல்களையும் வாக்கி டாக்கியில் பகிர முடியாது. அதனால், பல சங்கடங்கள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க, தற்போது அனைத்து போலீஸ் அதிகாரிகளும் வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கியுள்ளனர். சென்னை மாநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் தலைமை யில் உள்ள வாட்ஸ்அப் குழுவில் கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணை யர்கள் இடம் பெற்றுள்ளனர்.

தகவல்களை பரிமாறுவதுடன் முக்கிய உத்தரவுகளைக் கூட குழுவில் பதிவிடுகின்றனர். அதன் அடிப்படையில், அவருக்கு கீழ் உள்ள அதிகாரிகள் செயல் படுகின்றனர். இதேபோல சென் னையில் உள்ள 12 காவல் மாவட்ட துணை ஆணையர்களில் பெரும் பாலானவர்கள் வாட்ஸ்அப் குழுக்களை வைத்துள்ளனர்.

இதுகுறித்து, அம்பத்தூர் துணை ஆணையர் ஆர்.சுதாகர் கூறும்போது, ‘‘எங்கள் காவல் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரிக்க, இது போன்ற வாட்ஸ்அப் குழுக் களை வைத்துள்ளோம். எங்களுக்குத் தேவைப்படும் தகவல்களை நாங்கள் உடனுக்குடன் பகிர்ந்து கொண்டு அதன் அடிப்படையில் செயல்படுகிறோம்’’ என்றார்.

மயிலாப்பூர் துணை ஆணையர் வி.பாலகிருஷ்ணன் உருவாக்கியுள்ள வாட்ஸ்அப் குழுவில் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள், மயிலாப்பூர் காவல் எல்லைக்குட்பட்ட ஆய் வாளர்கள், பீட் ஆபீஸர்கள், ரோந்து போலீஸார் இடம் பெற் றுள்ளனர். இக்குழுவில் உள்ள ரோந்து போலீஸார், நாள்தோறும் தாங்கள் செய்யும் பணி விவரங்களை பதிவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், குற்றச் சம்பவங்கள் குறித்து உடனுக்குடன் தகவல் தெரிவிக்குமாறு குழுவில் உள்ள குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. போலீஸார் ரோந்துப் பணிக்கு வராமல் இருந்தால் அதுபற்றி தெரிவிக்கும்படி குடி யிருப்போர் நலச் சங்க நிர் வாகிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

துணை ஆணையர் வி.பாலகிருஷ்ணன் கூறும்போது, ‘‘அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட சில இடங்களில்தான் அதிக குற்றங்கள் நடக்கின்றன. எனவே தான் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகளை குழுவில் சேர்த்துள் ளோம். இது குற்றங்களை தடுக்க உதவியாக இருக்கும்’’ என்றார். உடனுக்குடன் தகவல்களை தெரிவிக்கும் வகையில் சென் னையில் உள்ள 135 காவல் நிலை யங்களுக்கும் வாட்ஸ்அப் குழுக் களை விரிவுபடுத்தினால் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த உதவி யாக இருக்கும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT