தமிழகம்

மின்கட்டணம் செலுத்த ஒருவாரம் கால அவகாசம்

செய்திப்பிரிவு

500 மற்றும் 1,000-ம் ரூபாய் நோட்டு கள் செல்லாது என அறிவிக்கப் பட்டதன் எதிரொலியாக மின்கட்ட ணம் செலுத்த ஒருவாரம் கால அவ காசம் வழங்கப்பட்டுள்ளதாக மின் சார வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு மின்னுற் பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு

மத்திய அரசு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்துள்ளதையடுத்து பொது மக்களின் வசதிக்காக இன்று (நேற்று) மின்கட்டணம் செலுத்த இறுதி நாள் கொண்டவர்களுக்கு வரும் 16-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கால அவகாசம் இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை கட்டணம் செலுத்துபவர்களுக்கு பொருந்தும். அதேபோல், வரும் 30-ம் தேதி இறுதி நாள் கொண்ட வர்களுக்கு டிசம்பர் 7-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட் டுள்ளது. அதேபோல், 9-ம் தேதி (நேற்று) முதல் மின்கட்டணம் செலுத்தும் போது 500 மற்றும் 1,000-ம் ரூபாய் நோட்டுகள் பெறப்படமாட்டாது.

SCROLL FOR NEXT