தமிழகம்

ரூபாய் நோட்டு தடையால் சாதக, பாதகங்கள்: ‘தி இந்து’ - எஸ்ஆர்எம் பல்கலை. இணைந்து சிறப்பு விவாதத்துக்கு ஏற்பாடு

செய்திப்பிரிவு

நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்றதால் ஏற்பட்டுள்ள சாதக, பாதகங்கள் குறித்த சிறப்பு விவாத அரங்குக்கு ‘தி இந்து’ தமிழ் நாளிதழும், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகளை கடந்த 8-ம் தேதி நள்ளிரவு முதல் திடீரென திரும்பப் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளின் முன்பும் ஏடிஎம்கள் முன்பும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கிறார்கள். பல இடங்களில் ஏடிஎம்கள் செயல்பட வில்லை. வணிக நிறுவனங்களில் வணிகம் குறைந்துள்ளது. ரியல் எஸ்டேட் தொழிலின் எதிர்காலம் எந்த திசையில் போகும் என்பதை பொதுமக்களால் கணிக்க இயல வில்லை. தங்க, வைர நகைகளின் விலை ஏறுமா அல்லது இறங்குமா என தெரியவில்லை.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டு கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் தாங்கள் சார்ந்த துறைகளில் எதிர்காலத்தில் எவ்வித மாற்றங்கள் உருவாகும் என்பதை அறிந்து கொள்ள அனைத்து தரப்பு மக்களுமே ஆர்வமாக உள்ளனர்.

இந்த விவகாரத்தில் பொதுமக் கள் எதிர்கொள்ளும் பிரச்சினை கள், அவர்களின் சந்தேகங்கள், கேள்விகள் போன்றவற்றுக்கு பல்வேறு துறைகளைச் சார்ந்த நிபுணர்களை திரட்டி ஒரு விவாத அரங்கத்தை நடத்த ‘தி இந்து’ தமிழ் நாளிதழும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

பொதுமக்கள் தங்களின் பிரச்சினைகள், கேள்விகள், சந்தேகங்களை எங்களுக்கு அனுப்பலாம். உங்கள் கேள்விகளை முகமும், குரலும் தெளிவாக இருக்கும் வகையில் செல்போன் வீடியோவில் பதிவு செய்து, அதை 72990 36828 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்ப வேண்டும்.

உங்கள் வீடியோ பதிவுகள் விவாத அரங்கில் ஒளிபரப்பு செய்யப்பட்டு, கேள்விகளுக்கு நிபுணர்கள் பதில் அளிப்பார்கள். உங்கள் கேள்விகளும், அதற்கான நிபுணர்களின் பதில்களும் ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் பிரசுரமாகும்.

உங்கள் கேள்விகளை முகமும், குரலும் தெளிவாக இருக்கும் வகையில் செல்போன் வீடியோவில் பதிவு செய்து, அதை 72990 36828 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பலாம்.

SCROLL FOR NEXT