தமிழகம்

கிடப்பில் உள்ள முதியோர் சிறப்பு பாதுகாப்பு திட்டம்: ‘ஸ்பீடு டயல் 2’ திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை

இ.ராமகிருஷ்ணன்

தியாகராய நகரில் வீட்டில் தனி யாக இருந்த மூதாட்டி 2 நாட்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் சென்னையில் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவங்களைத் தடுக்க கிடப்பில் போடப்பட்ட முதியோர் சிறப்பு பாதுகாப்பு திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. இது தொடர்பாக 2013-ல் 2 லட்சத்து 3,579 வழக்குகள், 2014-ல் ஒரு லட்சத்து 93,197, 2015-ல் ஒரு லட்சத்து 87,558 வழக்குகள் பதியப்பட்டன.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 5,125 கொலைகள் நடந்துள்ளன. ஆதாயக் கொலைகள் மட்டும் 355. ஆதாயக் கொலைகளில் குறிப் பாக சென்னையில் மேற்கு மாம் பலம், கோதண்டராமன் கோயில் தெருவில் வசித்த மூதாட்டி சகோதரிகள் ஜெயலட்சுமி (70), காமாட்சி (65) சில ஆண்டு களுக்கு முன்னர் கொலை செய்யப் பட்டனர். அவர்களது வீட்டில் இருந்த நகை பணமும் கொள்ளை யடிக்கப்பட்டது. இதே பாணியில் தொடர்ந்து கொலைகள் நடந்தன.

இதைத் தொடர்ந்து வீட்டில் தனியாக இருக்கும் முதியோர்களை பாதுகாக்க போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர். அதன் ஒரு பகுதியாக சென்னையில் வீட்டில் தனியாக வசிக்கும் முதி யோர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணி தொடங்கியது.

கைவிடப்பட்ட திட்டம்

வீட்டில் தனியாக இருக்கும் முதியோர்கள், தங்களுக்கு பாது காப்பு தேவை எனில் சென்னை காவல்ஆணையர் அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரி அறை தொலைபேசி (044 2345 2320) எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்லாம். acpro.office@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தகவல் தெரிவிக்கலாம் என அறி விக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஆயிரத் திற்கும் மேற்பட்ட முதியவர்கள் தங்களது பெயர், முகவரி, செல் போன் எண்களை காவல் ஆணை யர் அலுவலகத்தில் தெரிவித் தனர். பதிவு செய்த அனைவரின் வீட்டையும் போலீஸார் இரவு மற்றும் பகல் நேரங்களில் ரோந்து சுற்றி வந்தனர். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், இந்த திட்டம் தற்போது கைவிடப் பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் தியாகராய நகரில் வீட்டில் தனியாக வசித்து வந்த சாந்தி (66) என்பவர் கொலை செய்யப் பட்டுள்ளார். எனவே, இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல், முதியோர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அவர்களின் பட்டி யலை தயார் செய்து அவர்களின் வீடுகளை முன்பு ரோந்து சுற்றி வந்ததுபோல் போலீஸார் ரோந்து சுற்றி வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

போலீஸ் ரோந்து இல்லை

இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத முதியவர் ஒருவர் கூறியதாவது:

நானும் மனைவியும் தனியாக உள்ளோம். எங்களின் விவரங்களை காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்பு தெரிவித்து இருந்தோம். இதைத் தொடர்ந்து போலீஸார் எப்போதும் எங்கள் வீடுகளை சுற்றி ரோந்து வருவார்கள். எங்களிடம் பேச்சுக் கொடுப்பார்கள். இது எங்களுக்கு பாதுகாப்பை உறுதிப் படுத்துவதாக இருக்கும். ஆனால், தற்போது அப்படி செய்வ தில்லை. எங்கள் பகுதிக்கே எப்போதாவதுதான் ரோந்து வருகிறார்கள். முன்புபோல் வயோ திகர்களின் பட்டியலை பெற்று அவர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து, காவல்துறை கூடுதல் ஆணையர் கே.சங்கர் கூறு கையில், “சென்னையில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு வழங் குவது எங்களின் கடமை. அதை செய்து வருகிறோம்” என்றார்.

முதியவர்கள் உடல் மற்றும் மனதால் வலுவிழந்து இருப்பதால் அவர்கள் குற்றவாளிகளின் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகின்றனர்.

மேலும் வீட்டில் தனியாக இருக்கும் முதியோர்கள் மாரடைப்பு போன்ற நோயினால் பாதிக்கப்படுகின்றனர். அப்போது, உதவிக்கு ஆள் இல்லாமல் உயிர் இழக்க நேரிடும். எனவே வீடுகளில் தனியாக வசிக்கும் முதியோர்களுக்கு போலீஸார் வீடு தேடிச் சென்று உதவி செய்யும் “ஸ்பீடு டயல் 2” என்ற சிறப்பு திட்டம் நீலாங்கரை, கே.கே.நகர் காவல் நிலையங்களில் கொண்டு வரப்பட்டது.

சம்பந்தப்பட்ட முதியோர்களின் பெயர், முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை ஏற்கனவே, போலீஸார் சேகரித்து வைத்திருப்பார்கள். இதனால், முதியவர்கள் தங்கள் செல்போனில் உள்ள 2-வது எண் கொண்ட பட்டனை அழுத்தினால் போதும். அழைப்பு காவல் நிலையத்திற்கு சென்று விடும், போலீஸார் உடனடியாக உதவிக்கு வருவார்கள். இந்தத் திட்டத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT