500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டு கள் செல்லாது என்று அறிவிக்கப் பட்டதை அடுத்து பணப்புழக்கத்தில் ஏற்பட்ட தொய்வால் தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானகடைகளில் கடந்த 3 நாட்களில் ரூ.35 கோடி அளவுக்கு வருவாய் பாதிக்கப்பட் டுள்ளது.
500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டு கள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி அறிவித் தார். இதையடுத்து, 9-ம் தேதி யன்று 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளுடன் பலர் மது வகை களை வாங்க டாஸ்மாக் கடைக்கு சென்றனர். ஆனால், அங்கு அந்த நோட்டுகள் வாங்கப்படவில்லை. 10-ம் தேதியும் இதே நிலை நீடித் தது. 11-ம் தேதி ஏடிஎம் மையங் கள் இயங்கும் என்று சொல்லப் பட்டிருந்தபோதிலும், அன்றைய தினம் ஏடிஎம் மையங்கள் போது மான அளவு இயங்கவில்லை.
நேற்றைய தினமும் ஏடிஎம் மையங்கள் சரியாக இயங்க வில்லை. பொதுமக்களுக்கு பணம் கிடைப்பதில் ஏற்பட்ட தொய்வால், பணப்புழக்கம் குறைந்தது. இது டாஸ்மாக் கடைகளின் வருவாயை பாதிப்படைய வைத்துள்ளது.
இப்பிரச்சினையால் டாஸ்மாக் கடைகளில் கடந்த 3 நாட்களில் ரூ.35 கோடி அளவுக்கு வருவாய் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர் பாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதையடுத்து டாஸ்மாக் கடைகளிலும் அந்த நோட்டுகளை வாங்கவில்லை. இதனால் நிறைய பேர் டாஸ்மாக் கடைகளுக்கு அந்த நோட்டுகளுடன் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 100 மற்றும் அதற்கும் குறைவான ரூபாய் நோட்டுகளே டாஸ்மாக் கடைகளில் ஏற்கப்பட்டன. இதனால், டாஸ்மாக்கின் வருவாய் சுமார் 15 சதவீதம் அளவுக்கு குறைந்தது.
வழக்கமாக ரூ.70 கோடி வரை டாஸ்மாக் நிறுவனத்துக்கு வருமானம் கிடைக்கும். அதுவே, வார இறுதி நாட்களான வெள்ளி, சனிக்கிழமைகளில் ரூ.5 கோடி அதிகமாகி ரூ.75 கோடி வரை விற் பனையாகும்.
ஆனால், பணப்புழக்கம் குறைந்ததால் கடந்த 3 தினங் களில் ரூ.35 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.