தமிழக காங்கிரஸ் தலைவர் திரு நாவுக்கரசர் சிதம்பரத்தில் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டி:
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வரின் உடல்நிலை முன்னேற்றம் அடைந் திருப்பதாக வரும் தகவல் மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்குக் காரணம், அமைச்சர்கள் அவர்களது துறை களை கவனிக்காததே.
மத்திய அரசு கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவதாகக் கூறுவது வரவேற்கத்தக்கது. ஆனால் தற்போது பாமர மக்களின் சுருக்குப் பையில் இருந்த பணத்தை செலவழிக்கச் செய்துவிட்டது. இதுதான் மோடி அரசின் ராஜதந்திரமா? மக்கள் இன்று பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி தவித்து வருகின்றனர். இதனை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.