தமிழகம்

தமிழ்நாடு உருவான தினத்தை கொண்டாட வேண்டும்: அரசுக்கு கொமதேக கோரிக்கை

செய்திப்பிரிவு

கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி யின் மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

மொழிவாரியான மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழ்நாடு என்ற பெயரில் தமிழர்களுக்கு என்று தனி மாநிலம் அக்டோபர் 31-ம் தேதி உருவானது. சாதி, மத, அரசியல், பொருளாதார, வேறுபாடுகளை மறந்து தமிழர்களை ஒற்றுமைப் படுத்தும் வகையில் இந்த தினத்தை அரசு கொண்டாட வேண்டும். இந்தியாவிலேயே மொழிக்கான போராட்டம் தமிழகத்தில் தான் வேறெங்கும் இல்லாத அளவுக்கு கொளுந்து விட்டெறிந்தது. இன்றும் இந்திக்கு எதிராக, சமஸ்கிருதத்துக்காக குரல் கொடுப்பவர்கள் ஏன் மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்ட தமிழ் நாடு தினத்தன்று ஒன்றும் செய்வ தில்லை என்ற கேள்வி எழுகிறது.

தமிழகத்தின் முன்னேற்றம் கேள்விக்குறியானால் சாதி, மத, அரசியல் வேறுபாடுகளை துறப் போம். தமிழர்களாக ஒற்றுமைப் பட்டு வெற்றி காண்போம்.

SCROLL FOR NEXT