கோப்புப் படம் 
தமிழகம்

தமிழகத்தில் பிளஸ் 2-க்கு மார்ச் 14, பத்தாம் வகுப்புக்கு ஏப்.6-ல் பொதுத் தேர்வுகள் தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 14-ம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 6-ம் தேதியும் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார்.

தமிழகத்தில் நடைபெற உள்ள அரசு பொதுத் தேர்வு தேதிகளை பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று (நவ.7) அறிவித்தார். அப்போது அவர் கூறியது: "2022 - 2023ம் கல்வியாண்டிற்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு 14.3.2023-ல் தொடங்கி 3.4.2023 வரை நடைபெறும். 7,600 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுகின்றனர். உத்தேசமாக 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மையங்கள் அமைக்கப்படவுள்ளன. 8.8 லட்சம் பேர் உத்தேசமாக தேர்வு எழுத உள்ளனர்

2022 - 2023-ம் கல்வியாண்டிற்கான 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு 14.3.2023-ல் தொடங்கி 5.4.2023-ல் வரை நடைபெறும். 7,600 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுகின்றனர். உத்தேசமாக 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மையங்கள் அமைக்கப்படவுள்ளன. 8.5 லட்சம் பேர் உத்தேசமாக தேர்வு எழுத உள்ளனர்.

2022 - 2023-ம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 6.4.2022 முதல் 20.4.2023 வரை நடைபெறும். மொத்தம் 12,800 பள்ளிகளைச் சேர்ந்த 10 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். இந்த மூன்று பொதுத் தேர்வுகளையும் மொத்தம் 27 லட்சம் பேர். எழுத உள்ளனர்.

தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் உடனடியாக தங்களின் தயாரிப்பை தொடங்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. வேறு எந்த விசியத்திலும் உங்களின் கவனம் இருக்க கூடாது. மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான நல்ல சூழலை பெற்றோர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் உருவாக்கி தர வேண்டும். மாணவர்கள் பயம் இல்லாமல் தேர்வு எழுத வேண்டும்" என்று அமைச்சர் கூறினார்.

SCROLL FOR NEXT